
சிலாபம் 64ம் கட்டைப் பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குமாரகட்டுவ, மிகல்லவட்டவன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிலாபத்திலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் உள்ள மதில் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்தோடு, குறித்த லொறியில் பயணித்த சாரதி உயிரிழந்த நிலையில் உதவியாளர் சிலாபம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மாதம்பை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.