
தலவாக்கலை லோகி தோட்டத்திற்கருகில் வெட்டப்பட்ட மரம் முறிந்து வீழ்ந்தத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
அத்தோடு ஒருவர் காயந்த நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரம் முறிந்து மின்கம்பம் மீது வீழ்ந்தது.இதனையடுத்து மின்கம்பம் உடைந்து உந்துருளியில் அமர்ந்திருந்த இருவர் மீது வீழ்ந்தத்தில் அவர்கள் காயமடைந்தனர் என குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.