
சென்னை, பெப்.21
தோட்டம், மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் உள்ளிட்டோர் திங்கட்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து உரையாடினர்.
இச் சந்திப்பில் அமைச்சருடன் இலங்கை பிரதமரின் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர்.
தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி விட்டு 4 வது நுழைவாயில் அருகே மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு ஒப்பந்தம் மற்றும் உள்கட்டமைப்பு சம்பந்தமாகவும் இலங்கை மற்றும் தமிழகத்தின் நட்புறவு சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.