பழமையான மரம் இரண்டாக முறிந்து விழுந்ததில் பலியான நபர்!

தலவாக்கலை – லோகி பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் இருக்கும் ஆலமரத்தி கிளைகளை வெட்டி அகற்றும் பணிகளின்போது ஆலமரம் இரண்டாக முறிந்து பிரதான பாதையில் விழுந்ததில், மோட்டாா் சைக்கிளில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

குறித்த சம்பம் இன்று பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியானவர் தலவாக்கலை தேசிய பாடசாலையின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சாலையில் கிடந்த ஆலமரக்கிளைகளை கடந்து செல்ல முடியாமல் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் நுவரெலியா தலவாக்கலை போக்குவரத்து தடைப்பட்டது.

இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலமரக்கிளைகள் அப்புறப்படுத்த தலவாக்கலை பொலிஸார் வீதி போக்குவரத்து அதிகார சபையினருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *