
முழுமையான உலக இணைப்பும் மொழி பாவனையில் தங்கியுள்ளதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிக காரியாலயமும் கல்வி அமைச்சும் இணைந்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சர்வதேச மொழி தின கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கை மக்களுக்கு அவர்களின் தாய்மொழியில் கல்வி முதல் சேவைகளை பெற்று கொள்வதும் உலகெங்கிலும் மக்கள் வசிக்கின்ற வகையில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தச் சங்கங்களில் அவர்களின் தாய்மொழியில் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தாய்மொழி – தாய்நாடு என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற கலை, சிறுகதை, கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஹரிபுல், ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளர் சிங், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.