வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள், யாழ் மாவட்டச் செயலகம், மற்றும் மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் வடக்கு மாகணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில் தமது கை குழந்தைகளுடன் வெய்யிலில் போராட்டத்தில் எடுபட்டமையை அவதானிக்க முடிந்துள்ளது.
அதன் பின்னர், மாகாண ஆளுநருடன் zoom தொழில் நுட்பம் மூலம் முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துரையாடியுள்ளனர்.


