
நாட்டில் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல அனைத்து விதமான பிரச்சனைகளும் உருவாகி நாட்டை ராஜபக்ஷ குடும்பத்தினர் பள்ளத்தில் தள்ளியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியிக் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒரு பக்கம் பெசில் ராஜபக்ஷ அவர்கள் கூறுகிறார் கடன் பெற்றவர்களிடம் தாம் பேசுவதாக மற்றய பக்கம் கப்ரால் அவர்கள் கூறுவது கடன் பெற்றவர்களோடு கலந்துரையாட முடியாது இன்னும் சில நாட்களில் இவ் முதல் பிரச்சனை தீரும் என்று.
ஹெரான் அமைச்சர் கூறியவாறு நம் நாடு இன்னும் எவ்வளவு நாட்களிற்கு நாடாக இருக்கும் என்று தெரியவில்லை. எண்ணெய் இல்லை மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படும்.
தற்போது நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் கூறுவது உலகநாடுகளில் உதவியை பெறுங்கள் என்று.
ஆனால் இன்று டொலர்களை மிச்சப்படுத்த உரங்களை நிறுத்தி விவசாயிகளிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்று எதுவும் இல்லை.
2019 ஏப்ரல் மாதம் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. அப்போதும் நாடு பாரிய வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டது. 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எனவே கடன் அதிகமாகியது.
அதாவது இதற்கு தீர்வு காணும் வகையில் கடனை அடைத்தால் நாட்டை முன்னோக்கி நகர்த்தலாம் என்று இல்லை எனில் கடன் வழங்கும் வழங்கப்படுவதை நீடிக்க அதாவது கடன் திருப்பி வழங்க காலத்தை நீடிக்க வேண்டும் என்று.
மூன்றாவது யோசனையாக நன்கு தெரியும், கடனிற்கு காலம் தராவிடின் அதற்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அதாவது உலக நாடுகளில் தம் தமது நாடுகளில் சேமித்து அவற்றின் வட்டி பணத்தை வேறு நாடுகளிற்கு வழங்குவது
இரண்டாவது parise club எனும் அமைப்பு காணப்படுகிறது அவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
தனியார் துறையில் கடன் வழங்குவது போன்ற மூன்று துறையுடன் கலந்துரையாட வேண்டும்- என்றார்.