
முல்லைத்தீவு, பெப்.22
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து தனியார் பேருந்து மூலம் முல்லைத்தீவு – அளம்பில் பகுதிக்கு சென்று வீடொன்றில் வன்முறையில் ஈடுபட்டிருந்த குழுவை ஊர் மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தசம்பவம் தொடர்பாக தொியவருவதாவது,
கீரிமலையில் இருந்து சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் காங்கேசன்துறை வழித்தடத்தில் சேவையல் ஈடுபடும் தனியார் பேருந்தை வாடகைக்கு பிடித்துக் கொண்டு அளம்பில் பகுதிக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது இரு தரப்பிலிருந்தும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து அயலவர்கள் ஒன்றுகூடி பஸ்ஸை மடக்கியதுடன், பேருந்தில் இருந்தவர்களை மடக்கி பிடித்து அடித்ததன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.