யாழில் இருந்து பேஸ்புக் காதலனுக்காக வெளிநாடு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கதி!

கடந்த 5 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய யாழ் பருத்தித்துறையை சேர்ந்த பெண்ணொருவர் தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்துள்ளார்

சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் நபருக்கும், யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறையை சேர்ந்த குறித்த பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் நட்பானது.

நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா விசா மூலம் சேலம் வந்தடைந்தார் யாழ்ப்பாணத்து பெண், இதையடுத்து அங்குள்ள கோவில் ஒன்றில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்களது திருமணத்தை பதிவு செய்ய இருவரும் அரசு அலுவலகத்தை நாடிய போது திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதால் தடையில்லா சான்று வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இதனால் செய்வதறியாது திணறிய காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதற்கிடையே விசா காலமும் விரைவில் முடிவடைவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *