மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமான சிவவாரம்

அகில இலங்கை சைவ மகா சபை, சைவ பரிபாலன சபை, சைவநெறிக் கூடம் , தமிழ் சைவப் பேரவை ஆகியன இணைந்து முன்னெடுக்கும் சிவ வாரத்தின் ஆரம்ப நாள் இன்று வைபவ ரீதியாக மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் அகில இலங்கை சைவ மகா சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

அந்த வகையில் இம்மாதம் 22ஆம்திததி முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை இச்சிவவாரத்தை முன்னிட்டு வன்னி, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு பகுதிகளில் விசேட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான ஆரம்ப நிகழ்வாக மாதகல் சம்பில்துறை யில் மலையகத்தை சேர்ந்த நரசிங்க நவநீத சித்தரினால் 21அடி சிவன் சிலை முன்றலில் நந்திக்கொடி வைபவரீதியாக ஏற்றி வைக்கப்பட்ட தோடு, ஞாபகார்த்த மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டது.

மேலும் மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வர் ஆலயத்தின் சைவ மகாசபையின் சிவ தொண்டர்களால் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை சைவ மகாசபையின் சிவனடியார்கள் , அகில இலங்கை சைவ மகாசபையின் பொருளாளர் அ. சிவானந்தன், மலையக சிவனடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *