
கொழும்பு, பெப் 22: புத்தாண்டு காலத்தில், நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” புத்தாண்டு காலத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும். மக்கள் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். மேலும், தற்போது டெங்கு நோய் நாடு முழுவதும் பரவி வருகிறது. டெங்கு நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மக்கள் இது தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.