
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிவரும் அல்லது எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
லங்கா ஐ.ஓ.சி.எண்ணெய் நிறுவனம் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ள காரணத்தால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க முயற்சிக்கின்றது.
எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்வரும் ஜூன் மாதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடந்த மாதம் 3 ஆம் திகதி பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
எரிபொருளின் விலை நிர்ணயத்தன்மையற்றதாகக் காணப்படும் பட்சத்தில், பஸ் கட்டணத்தை மாத்திரம் எவ்வாறு நிலையான தன்மையில் பேணுவது என்ற சிக்கல் நிலைமை தோற்றம் பெறுகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்க வேண்டும். அல்லது எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதை அனைத்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரும் ஒன்றிணைந்து போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.