
கொழும்பு, பெப்.22
ஏப்ரல் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தொகுக்கப்பட்ட இறுதி அறிக்கை, இணைப்புகள் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
88 இணைப்புகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை ஜனாதிபதி சட்டத்தரணி பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து கையளிக்கப்பட்டது.