
கொழும்பு, பெப் 23: நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வண்டியை உரிய வரி செலுத்தாமல் விற்பனை செய்ய முயன்ற ஆறு பேரை மாரவில பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நாத்தாண்டிய, குருநாகல், ரிதீகம, புக்பிட்டிய மற்றும் கொன்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
மேல் மாகாணம் – வடக்கின் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது ஜீப் வாகனம் தவிர மேலும் இரண்டு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.