
தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்தும் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயார் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.