நாட்டின் தற்போதைய நிலை குறித்து நாடாளுமன்றில் இன்றைய தினம் விசேட விவாதம் நடத்தப்பட உள்ளது.
இன்றைய தினம் முற்பகல் 11 மணி முதல் 5.30 மணி வரையில் விவாதம் நடாத்தப்பட உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதம் குறித்த யோசனையை முன்வைத்திருந்தது.
பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் பிரச்சினை நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதிக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
