
நெடுந்தீவு – குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த குமுதினிப்படகானது நீண்ட நாட்களாக செயற்பாடற்ற நிலையில் உள்ளது.
இதனையடுத்து, குறித்த விடயத்தை, அப்பிரதேச மக்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன் பலனாக அவரது துரித நடவடிக்கையில் 1 கோடி 40 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்றையதினம் ஒப்பந்தகாரருக்கான அறிவுத்தல்கள் வழங்கப்பட்டு, இம்மாத இறுதியில் புனரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.