
கொழும்பு, பெப் 23: இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
கொரோனா தொற்றுக்குள்ளான வனிந்து ஹசரங்க இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்றும், இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்-டி பிசிஆர் கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஹஸரங்கவுக்கு கொரோனா தோற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், ஆஸ்திரேலியா தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.
நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க, விளையாட முடியாமல் இருப்பதால், இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.