
முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு ரூ.100 மில்லியன் வழங்க சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
6,236 ஹெக்டேயர் பரப்பளவை கொண்டுள்ள முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பாதீட்டில் சுற்றாடல் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.200 மில்லியனில் ரூ100 மில்லியனை முத்துராஜவெல ஈரநிலத்தை பாதுகாப்பதற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.