
கொழும்பு, பெப்.23
EPF இன் புதிய சட்டத் திருத்தத்துக்கமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தொழிலாளர் ஆலோசனை சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் கூறியதாவது,
இதுவரை, ஊழியர் சேமலாப நிதியின் 30% பயனாளிகளின் நிதி வீட்டுக் கட்டுமான பணிகள், மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே விடுவிக்கப்பட்டது.
எனினும், எதிர்காலத்தில் உறுப்பினர்கள் தமது தேவைகளுக்காக 30% நிதியை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து பத்து வருடங்களாக ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்துக்கு ரூ.300,000 மேல் பங்களிப்பு செய்த உறுப்பினர்கள், இந்த 30% முன் நிதியை பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவர்கள் என தெரிவித்தார்.