
கொழும்பு, பெப் 23: ஹொரணை – கொழும்பு வீதியில் கோரலைம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.