
நாட்டை ஆளும் ராஜபக்சாக்களின் குடும்பம் திருந்த வாய்ப்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
ராஜபக்சாக்களின் குடும்ப செயற்பாட்டை கல்லில் பொறிப்பதா, இல்லை கரைத்து விடுவதாக என்று அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். இன்னமும் காலம் உண்டு.
ஆனால் அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 69 லட்சம் மக்களின் வாக்குகளை பெற்றோம் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நீங்கள், அத்திவாரம் இல்லாத கட்டடம் போல இருக்கிறீர்கள். அமைச்சரவை கூட்டும் இல்லை, அமைச்சர்கள் ஒருவருக்கு ஒருவர் தாமே விமர்சித்துக் கொள்கின்றனர்.
திறந்த வெளியில் அமைச்சரவை கூட்டத்தை நடாத்துங்கள். ஒரு கால் பந்து கூட உங்கள் உதையை தாங்கி கொள்ளாது. அந்தளவுக்கு அடிக்கடி அமைச்சர்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் மாற்றுகிறீர்கள். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை வைத்து எல்லாவற்றையும் செய்கிறீர்கள். கறுப்புச் சந்தையில் ஆயுதம் வாங்கி போரை முடித்தோம் என நிதி அமைச்சரே சொல்கிறார்.
இப்படியான நிதி அமைச்சரை தான் நாட்டில் வைத்துள்ளோம்.ரஞ்சன் ராமநாயவுக்கு ஒரு நீதியும், தேரருக்கு இன்னொரு நீதியும் என நீங்கள் நடந்து கொண்டு, ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொலிக்கிறீர்கள். உப்புச் சப்பில்லாத பயங்கரவாத தடைச் சட்டம். யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறீர்கள்.- என்றார்.