
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் எதிர்வரும் வியாழக்கிழமை பேரவையில் சமர்ப்பிப்பார்.
ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை சார்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை பதிலளித்து உரையாற்றவுள்ளார்.