
டீசல் இல்லாத காரணத்தினால் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று களுத்துறை நகரின் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டது.
இதனால் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாகத் தெரியவருகிறது.
பஸ் நிற்கும் நேரத்தில், அங்கு 80 பேர் இருந்ததால், அவர்களை வேறு பஸ்களில் திருப்பி விட ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர், களுத்துறை டிப்போவில் இருந்து டீசல் கொண்டுவரப்பட்டு பேருந்து இயக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.