
நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமைப் புரியும் பொலிஸ் கான்ஸ்டபிளான அஜித் என்பவர் ஹெரோயினுடன் நேற்று கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் தனது மணைவியை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் பார்க்க சென்ற முற்பட்டபோது வைத்தியசாலைக்கு முன்னாள் சுற்றிவளைப்பை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 54 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளனர்.