
கொழும்பு, பெப் 23: தேர்தல் ஆணைக்கு கூட்டத்தில் இடையில் எழுந்து வந்துள்ளதாக கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் “வீடு வீடாக சென்று வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ளும் வழமையான நடவடிக்கை, தற்போது கொரோனா சூழலை காரணமாக காட்டி வழமைபோல் நடைபெறுவதில்லை.
இது சம்பந்தமாக கலந்துரையாடலாம் என தேர்தல் ஆணையக தலைவர் அழைத்த கூட்டத்திற்கு வந்தால் அங்கு உட்கார ஒழுங்காக இடமில்லை. நூறு பேருக்கு மேல் கூட்டம். ஆனால் ஒழுங்கான மண்டப வசதி தேர்தல் ஆணையகத்துக்கு இல்லை. கலந்துரையாடலை ஒழுங்காக செவிமடுக்கவும் முடியவில்லை.
வாக்குரிமை என்பது மிக முக்கியமான சிவில் உரிமை. இதிலிருத்துதான் ஏனைய உரிமைகள் ஆரம்பிக்கின்றன.
இன்று நாட்டில், கொரோனாவை காரணம் காட்டி, அரிசி இல்லை, பருப்பு இல்லை, சீனி இல்லை, பெட்ரோல் இல்லை என்பது போல் நாளை வாக்குரிமை இல்லை எனவும் சொல்ல போகிறீர்களா தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் சொல்லி விட்டு இடையில் எழுந்து வந்தேன் என்று தெரிவித்தார்.