
கொழும்பு, பெப்.23
நாட்டில் ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறான நேரத்துக்கே மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்யலாம் என ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் உயர்த்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இஸட் ஸ்கோர் முறைமை இதில் தாக்கம் செலுத்தும். எனவே, மார்ச் 5 ஆம் திகதிவரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என்றார்.