
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தொியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
காய்ச்சல் காரணமாக கடந்த 16ம் திகதி சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நோய் தீவிரமடைந்ததால் அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மறுநாள் 17ம் திகதி அவரது மனைவி யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று பார்த்தபோது கணவனை அங்கு காணவில்லை.
இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்லாமியர்களுக்கென தனிச்சட்டம் இலங்கையில் இல்லை! அமைச்சரவையில் கலவரம்