
கொழும்பு முழுவதிலும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சுழற்ச்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி இன்று A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணி 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.