
யாழ்ப்பாணம் _ பருத்தித்துறை கிராமக்கோட்டுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேமாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த முச்சக்கவரண்டி மீது மோதியதுடன், பேருந்துக்காக காத்திருந்த கூலித்தொழிலாளியான முதியவர் ஒருவரை மோதி, அதன் பின்னர் மற்றொரு முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மோதி வீழ்ந்துள்ளது.
சம்பத்தின் போது விபத்தில் சிக்கிய கூலித்தொழிலாளியான முதியவரின் கால் உடைந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓடிச் சென்ற இளைஞர் காயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கென தனிச்சட்டம் இலங்கையில் இல்லை! அமைச்சரவையில் கலவரம்