சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா…!

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் அதிபர் யு.எல். நசார் தலைமையில் நேற்றையதினம் (02)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் மெட்றோபொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  கலந்து கொண்டார். 

பாடசாலை அதிபரின்  அழைப்பை ஏற்று கள விஜயம் செய்த முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இப்பாடசாலைக்கு அவசர தேவையாக இருந்த கனணியும், பிரின்டிங் மெசினையும் நிகழ்வில் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  பாடசாலைக்கு வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிராஸ் மீராசாஹிப் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

தான் படித்த ஆரம்ப பாடசாலைக்கு தன்னாலான சகல உதவிகளை செய்து தருவதாக உறுதி வழங்கியதோடு, குறித்த பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பாடசாலையின் பாண்ட் வாத்திய குழு மாணவர்களுக்கான புதிய சீருடையையும் மிக விரைவில் தயார்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பிரதிக் கல்வி பணிப்பாளர் , பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *