
கொழும்பு, பெப் 12: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்தாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,086 ஆக உயர்ந்துள்ளது. இறந்த 31 பேரில், 18 ஆண்களும் 13 பெண்களும் அடங்கும்.
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,583 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 639,297 ஆக அதிகரித்துள்ளது.