
யாழ் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் கசிப்பு குகை ஒன்றை தெல்லிப்பளை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டனர்.
கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெல்லிப்பளை விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதி நேற்று முன்தினம் முற்றுகையிடப்பட்டது .
இதன்போது கசிப்பு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆயிரம் லிட்டர் கோடா மற்றும் 20 லிட்டர் கசிப்பு மற்றும் உபகரணங்கள் வைக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்ழைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.