
ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனை கற்பிட்டில் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய புத்தளம் வைத்தியசாலைக்கு முன்னால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த பொலிஸ் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.