
ஹல்பராவ பகுதியில் இருந்து வந்த சிறிய ரக லொறியொன்று, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
களனிவெளி ரயில் பாதையில் பாதுக்கை வடருக ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் லொறி முற்றாக நொறுங்கி பலத்த சேதமடைந்துள்ளது.
அத்துடன் அதன் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து, அருகில் உள்ள விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.