மூதூர் – ஆலிம்சேனை பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் குடும்பஸ்தர் ஒருவரை மூதூர் பொலிஸார் செவ்வாய்கிழமை (22) மாலை கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து 05 கிராம் 100 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் – ஆலிம்சேனை பகுதியைச் சேர்ந்த 06 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் போதைப்பொருள் வைத்திருப்பதாக மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலே இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூதூர் பொலிஸில் தடுத்து வைக்கப்ட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொங்கவிடப்பட்ட பதாதை! ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்