சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வானது ஜனாதிபதி தலைமையில் இன்று (23) திகதி இடம்பெற்றது.
இன்றைய தினம் ஜனாதிபதி விருதினை பொற தகுதியுடைய நாடு பூராகவும் உள்ள அனைத்து சாரணர்களையும் ஒரே இடத்திற்கு அழைக்க முடியாத கொவிட் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி விருதினை வழங்கி வைக்கும் குறித்த நிகழ்வானது நிகழ்நிலை (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து சாரணர்களையும் ஒருமித்து இடம்பெற்றிருந்தது.
வடக்கு மாகாணத்தில் 26 பேருக்கு சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது மற்றும் சின்னஞ்சூட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், வடமாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இருவருக்கு உத்தியோக பூர்வமான சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது கொழும்பில் வழங்கப்பட்டுள்ளது.


