புத்தளம் மாவட்ட பிராமணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்கள் கௌரவிப்பு

புத்தளம் மாவட்ட பிராமணர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரத்தில் சித்தி பெற்ற அந்தன மாணவ, மாணவிகளே இவ்வாறு கௌரவிக்கபட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு இன்று (23) பிற்பகல் 2.30 மணிக்கு சிலாபம் முன்னேஸ்வரம் கொழும்பார் மடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமஸ்கிரத விரிவுரையாளரும், ஸ்ரீ வடிவாம்பிகா சமேத முன்னைநாதர் தேவஸ்தான தர்மகர்த்தாவும், பிரதம குருவுமான தேவி உபாசகர் பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் சர்மா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இந்து மத ஆலோசகரும், ஸ்ரீ துர்க்கா குருகல அதிபருமான சிவாகமரத்னா சிவஸ்ரீ விஸ்வநாராயண சர்மா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் மலையகம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிராமணர் ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், புத்தளம் ஸ்ரீ விநாயகர் தேவஸ்தான பிரதம குருக்களும், புத்தளம் மாவட்ட பிராமணர் ஒன்றியததின் செயலாளருமான சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்கள் உட்பட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரத்தில் சித்தி பெற்ற அந்தன மாணவ, மாணவிகள் அதிதிகளால் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், விழாவுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்து மத ஆலோசகரும், ஸ்ரீ துர்க்கா குருகல அதிபருமான சிவாகமரத்னா சிவஸ்ரீ விஸ்வநாராயண சர்மாவுக்கும் பிராமணர் ஒன்றியத்தால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *