
நாட்டில் விவசாயத்தை இல்லாமாக்கியது முன்னைய அரசாங்கம் அல்ல ராஜபக்ஷ குடும்பத்தினர் மட்டுமே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா 500 மில்லியன் டொலர்கள் ஜனவரி மாதம் வழங்காவிடின் இன்று இலங்கை பாரிய சிக்கலை எதிர்கொண்டிருக்கும்.
ஆகையால் எண்ணெய் கிடங்குகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளனர்.
2017 ஏப்ரல் 26 மாதம் எண்ணெய் கிடங்குகளை கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்ய மலிக் சமரவிக்ரம யோசனை கொண்டு வந்த போது
மே முதலாம் திகதி ராஜபக்ஷ மேடையில் கூறியது,
நாங்கள் எண்ணெய் கிடங்குகளை இந்தியாவிடம் இருந்து பெறுவோம் என்றும் உதயம் கம்மன்பில திருகோணமலை இலங்கை கொடியை ஏற்றுவோம் என்று ஆனால் இன்று அவர் பின்னாலே இன்று இச் சுமை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை பெறுவதற்காக இந்தியாவிடம் ஒரு மில்லியன் டொலர் பெற உள்ளனர் என்றார்.