
நாட்டில் தடைப்படும் மின்சார துண்டிப்பால் உயர் தர பரீட்சையிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதென இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாம் நன்கு அறிந்த விடயம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது நடைபெற்ற வரும் உயர் தர பரீட்சையிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது நமக்கு நன்கு தெரிந்த விடயம் முக்கியமான பரீட்சை ஒரு புள்ளியிலும் பல்கலைக்கழக அனுமதி தட்டுப்படலாம்
இவ்வாறான நேரத்தில் மின்சாரம் என்பது மிக அவசியம். மின்சாரம் இல்லாவிடில் மண்ணெண்ணை விளக்கில் படிக்க முடியும் நாங்களும் அவ்வாறு படித்தோம் என்று பலரும் கூறுகின்றனர்.
ஆனால் தற்போது பல நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுகிறது மாணவர்களிற்கு மிக அவசியமாக காணப்படுகிறது.
அதே போல பல துறைகளின் மின்சாரம் மிக அவசியம். எனவே தயவு செய்து இவ் உயர் தர பரிட்சை மிக அவசியமானது.
எனவே மின்சார துண்டிப்பை தடுக்க அரசாங்கம் உடனடியாக தீர்வை எடுக்க வேண்டும்.