மூன்று மாதத்திற்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் உள்ளன-
இலங்கை சுங்கத்திணைக்களத்திடம் உள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இலங்கையில் மூன்று மாதத்திற்கு போதுமான அத்தியாவசியப்பொருட்கள் உள்ளன என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்;டமொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பலஇடங்களிற்கு விநியோகிக்கப்பட்ட பொருட்கள் குறித்த தரவுகள் இல்லை என தெரிவித்துள்ள அவர்சுங்கத்திணைக்களம் மற்றும் மொத்தவியாபாரிகளின் தரவுகளின் அடிப்படையில் மூன்று மாதத்திற்கு போதுமான அத்தியவாசியபொருட்கள் சந்தையில் உள்ளன என உறுதி செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
சில பகுதிகளில் கிடைக்கின்ற சில பொருட்கள் ஏனைய பகுதிகளில் கிடைக்காது என தெரிவித்துள்ள அவர் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் அல்லது நிபந்தனைகளை விதித்தால் அவர்களை தண்டிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்