திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன (ATI) மாணவர் ஒன்றியத்தினால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவன பணிப்பாளர் கோகிலன், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அண்மையில் திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ATI) HND IT கற்கைநெறி இடைநிறுத்தப்பட்டுள்ளதை மாணவர்கள் , பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து உரிய தரப்பினருடன் பேசி அதற்கான தீர்வை பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.