
கொழும்பு, பெப் 23: தோட்ட தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் “தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ரூ.1,000 ஊதியம் வழங்க, 6 நிறுவனங்கள் மட்டுமே மறுப்புத் தெரிவித்துள்ளன. அவர்களுடன் பேசி வருகிறோம். விரைவில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்றார் அவர்.