
இந்தியா, பெப்.24
இலங்கையில் நிலவும் நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு உதவும் நோக்கில் இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இணையவழி கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நிதி நெருக்கடியை குறைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே பல பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் அந்நியச் செலாவணியை வழங்குவதோடு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இந்தியா கடன் வரியை நீட்டித்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் கடந்த சில நாட்களாக பரவலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.