
கொழும்பு, பெப் 24: நாட்டில் பனடோலுக்கு தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “ஓமிக்ரோன் திரிபு, டெங்குப் பரவல், இனம்தெரியாத வைரஸ் காய்ச்சல் ஆகியவற்ற்றால் நாட்டில் கடந்த 3 வாரங்களில் பனடோல் பயன்பாடு 275 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
பனடோல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால், நாட்டில் பன்டோலுக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பனடோல் உற்பத்தி மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பின்வாங்குகின்றன. இதனால் நாட்டில் பன்டோலுக்கு லேசான தட்டுப்பாடு நிலவுகிறது என்றார் அவர்.