கொழும்பு, பெப் 24: வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு, கலாசார அபகரிப்பு நடைபெறுவதாக கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு (ததேகூ) சார்பில் இன்று ஜனாதிபதி செயலகம் எதிரில் போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.