Rasi Palan 24th February 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 24th February 2022: ராசிபலன் நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோவப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்‌. உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்‌, ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன் கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல் நிலை சீராகும் . உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளை கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

தனுசு: இன்றைய தினம் வேலைச் சுமையால் சோர்வு அடைவீர்கள். அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

மகரம்: புதிய கோணத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்‌ வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

கும்பம்: நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறும் . உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். காரியம் கைகூடும் நாள்.

மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாக மடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *