
கடந்த வருடத்திற்கான வாக்காளர் பட்டியலை அவ்வாறே தொடருவதால், புதிய வாக்காளர்களுக்கான வாக்குரிமை இல்லாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், மீண்டும் ஆலோசனை கூட்டத்தை கட்டம் கட்டமாக நடத்துமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.