
அறிவிக்கப்பட்ட கால அட்டவணையை மீறி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிராகப் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட முடியும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது:-
உயர்தரப் பரீட்சைக்குத் மின்வெட்டுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மின்வெட்டு கவலையை ஏற்படுத்தும். உயர்தரப் பரீட்சை முடியும்வரையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
வெவ்வேறு நேரங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால் அது தொடர்பாக மனித உரிமை மீறல் வழக்குத் தொட முடியும் = என்றார்.
இது தொடர்பில் பதிலளித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்போது பரீட்சைகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
பரீட்சைகள் திணைக்களம், இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படுகின்றன -என்று கூறினார்.