
யாழ்ப்பாணம், பெப் 24:
யாழ்ப்பாணம் ராசாவின் தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த 73 வயதுடைய காணிக்கையம்மா ஜெயசீலி என்ற மூதாட்டியை பூச்சாடியால் அடித்து கொலை செய்தவரை, அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் “வீட்டு வேலைக்கு வந்த நபரே இந்தக் கொலையை செய்துள்ளார். குறித்த நபரை அடையாளம் காணும் வகையில், சம்பவ இடத்தில இருந்த சிசிடிவி கண்காணிப்புக்கு கமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்றார் அவர்.